என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சாலையை கடக்க முயன்ற தொழிலாளி கார் மோதி சாவு

    சாலையை கடக்க முயன்ற தொழிலாளி கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
    சேலம்: 

    சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அடுத்த அமரகுந்தி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 45). கூலி தொழிலாளி.  இவர் நேற்று இரவு 8 மணி அளவில் பெங்களூர்- சேலம் பைபாஸ் சாலையில் தண்ணீர் தொட்டி பெட்ரோல் பங்க் அருகே சாலையை கடக்க முயன்றார். 

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் கண் இமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ரவி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். 

    இது குறித்த தகவலின் பேரில் கருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவி உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ரவியின் மனைவி ஸ்ரீதேவி (40) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×