என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை சாத்தான்குளம் டவுன் பஞ்சாயத்து தலைவர் ரெஜினிஸ்டெல்லா பாய் தொடங்கி வைத்தார்.
    X
    மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை சாத்தான்குளம் டவுன் பஞ்சாயத்து தலைவர் ரெஜினிஸ்டெல்லா பாய் தொடங்கி வைத்தார்.

    சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் மஞ்சள் பை திட்டம் தொடக்க விழா

    சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் மஞ்சள் பை திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் தமிழக அரசின் முன்னோடி திட்டமான நமது மருத்துவமனை மகத்தான மருத்துவமனை திட்டத்தின் ஒரு அங்கமாக நடைபெறும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க மீண்டும் மஞ்சள் பை உபயோகிப்போம் திட்டத்தினை டவுன் பஞ்சாயத்து தலைவர் ரெஜினிஸ்டெல்லா பாய் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
     
    தலைமை மருத்துவர் டாக்டர் ஆத்திக்குமார் முன்னிலை வகித்தார். டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் உஷா மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டணர்.

    டவுன் பஞ்சாயத்து தலைவர் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் இணைந்து குழுவாக தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.  

    மாத மருந்துகள் வாங்கும் நோயாளிகளுக்கு முதல்வரின் மீண்டும் மஞ்சள் பை திட்டத்தின் கீழ் மஞ்சள் பையில் மருந்துகளை  சாத்தான்குளம் டவுன் பஞ்சாயத்து தலைவர் ரெஜினிஸ்டெல்லா பாய் வழங்கினார்.  மருந்தாளுநர் சித்திரை நன்றி கூறினார்.
    Next Story
    ×