என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ,
    X
    ,

    தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு, வழிப்பறி, நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நாமக்கல்-சேலம் சாலையைச் சேர்ந்த சரவணன்(25), ராமாபுரம்புதூரைச் சேர்ந்த பிரவீண் பாண்டியன்(24) ஆகியோரை நாமக்கல் போலீசார் அண்மையில் கைது செய்தனர்.

    தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங்கிற்கு, காவல் கண்காணிப்பாளர் சாய்சரண்தேஜஸ்வி, ஆய்வாளர் தெய்வசிகாமணி ஆகியோர் வழக்கு தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.

     இதனையடுத்து சரவணன், பிரவீண் பாண்டியன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து அதற்கான கடிதம் சிறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
    Next Story
    ×