search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர்.
    X
    இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர்.

    இந்து சமய அறநிலையத்துறைக்கு 69 புதிய வாகனங்கள்- மு.க.ஸ்டாலின் வழங்கினார்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை உயர் அலுவலர்களுக்கு 5 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவிலான 69 புதிய வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக, 2 அலுவலர்களுக்கு வாகனங்களை வழங்கினார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, 5 திருக்கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம், 100க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு குடமுழுக்கு, பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், கோவில்களின் நந்தவனங்களை சீரமைத்தல், 1000-க்கும் மேற்பட்ட திருக்கோவில்களில் திருப்பணிகள் நடத்த அனுமதி, ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு புதிய பள்ளி, கல்லூரிகள் தொடங்குதல் போன்ற பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

    2021-22ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், அலுவலர்களுக்கு 108 வாகனங்களை 8 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, முதற்கட்டமாக, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், மக்கள் தொடர்பு அலுவலர், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல்பொறியாளர்கள் ஆகியோர்களுக்கு 5 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் 69 புதிய வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அறநிலை துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன், அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமர குருபரன், கூடுதல் ஆணையர் இரா. கண்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×