என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
சேலம் மாவட்டத்தில் 20.69 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் இதுவரை 20.69 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.மாவட்டத்தில் 27.56லட்சம் பேருக்கு முதல் தவணையும், 20.69 லட்சம் பேருக்கு 2-வது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று 27-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இதற்காக மாவட்டம் முழுவதும் 1,070 தடுப்பூசி மையங்கள்
அமைக்கப்பட்டு, 18,500 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த முகாமில்
26,813 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சேலம் சுகாதார மாவட்டத்தில்18,032 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 7,183 பேரும் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் 1,598 பேரும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
Next Story






