search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூட்டி கிடக்கும் லட்சுமி நாராயணசாமி கோவிலின் மூலவர் சன்னதியை படத்தில் காணலாம்.
    X
    பூட்டி கிடக்கும் லட்சுமி நாராயணசாமி கோவிலின் மூலவர் சன்னதியை படத்தில் காணலாம்.

    சேலம் கடைவீதி லட்சுமி நாராயணசாமி கோவிலில் பூட்டியே கிடக்கும் மூலவர் சன்னதி-தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் தவிப்பு

    சேலம் கடைவீதி லட்சுமி நாராயணசாமி கோவிலில் மூலவர் சன்னதி பூட்டியே கிடப்பதல் தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் தவித்தனர்.
    சேலம்:

    சேலம் டவுன் கடை வீதியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த லெட்சுமி நாராயணசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கோட்டை அழகிரி நாதர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. 

     இந்த கோவிலை சுற்றி  எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும். மேலும் கடை வீதி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி விட்டு ராஜகணபதி கோவிலை வழிபடுவார்கள். இந்த கோவிலின் மூலவர் சன்னதி வாசல் எப்போதும் சரியான நேரத்தில் திறக்கப்படுவதில்லை என்று பக்தர்கள் ஏற்கனவே புகார் கூறி வந்தனர். 

    இந்தநிலையில் திருத்தொண்டர்சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் இன்று காலை கோவிலுக்கு வந்தார். அப்போது மூலவர் சன்னதி திறக்கப்படவில்லை. கிரீல் கேட் பூட்டியபடியே இருந்தது. இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம்  புகார் தெரிவித்தார். 

    இதையடுத்து சேலம் மாவட்ட இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரிக்க அவர் உத்தரவிட்டார். உடனே அங்கு  விரைந்து வந்த அதிகாரிகள் கோவிலுக்கு ஊழியர்கள் எப்போது வந்தனர் என்பது குறித்து அங்குள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தார். 

    மேலும் மூலவர் சன்னதி திறக்காமல் இருந்ததற்கு காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் இன்று  கோவில் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
    Next Story
    ×