search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    3வது அலையை வீழ்த்திய தடுப்பூசி- தமிழகத்தில் 1.29 கோடி பேர் அலட்சியம்

    நாடு முழுவதும் 78.1 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசிகளும் போட்டுள்ளார்கள். 94.9 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள்.
    3-வது அலையை வீழ்த்தி இருக்கிறது தடுப்பூசி.

    2019-ல் உருவெடுத்த கொரோனா வைரஸ் உலகையே புரட்டிபோட்டுவிட்டது. இந்தியாவில் சுமார் 30 லட்சம் பேர் இந்த கொடிய வைரசுக்கு பலியாகி இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.

    முதல் அலையைவிட 2-வது அலையில் தான் உயிரிழப்பும் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் 3-வது அலை உருவெடுத்ததும் அதன் தாக்கம் எப்படி இருக்குமோ என்ற பீதி எல்லோரிடமும் ஏற்பட்டது.

    ஆனால் எதிர்பார்த்த அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. எப்படி முதல் மற்றும் 2-வது அலைகளில் கொரோனா வைரஸ் மக்களை தாக்கி வீழ்த்தியதோ அதேபோல் தடுப்பூசிகள் இந்த அலையை விரைவாக வீழ்த்திவிட்டது.

    தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியான 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம். இவர்களில் இதுவரை 49 லட்சத்து 23 ஆயிரத்து 228 பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசியை கூட போட்டுக்கொள்ளவில்லை. இன்னும் 1 கோடியே 29 லட்சத்து 32 ஆயிரத்து 682 பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

    ஐ.சி.எம்.ஆர். இயக்குனர் பல்ராம் பார்கவா கூறும்போது, ‘மிகப்பெரிய அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் 3-வது அலையில் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

    நாடு முழுவதும் 78.1 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசிகளும் போட்டுள்ளார்கள். 94.9 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள்.

    கடந்த மாதம் 19 முதல் 28-ந்தேதி வரை சராசரியாக தினமும் ஒவ்வொரு நாளும் போடப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் ஒவ்வொரு மாநிலமும் 100 சதவீதம் தடுப்பூசியை செலுத்தி முடிக்க ஆகும் நாட்கள் விபரம் வருமாறு:-

    தமிழ்நாடு-132 நாட்கள், அந்தமான்-1,437, மேகாலயா- 1087, சண்டிகர்- 966, கோவா- 846, நாகா லாந்து- 762, பாண்டிச்சேரி- 784, மணிப்பூர்-301, ஜார்க்கண்ட்- 246, திரிபுரா- 243, அருணாசலபிரதேசம்- 234, லடாக்- 182, கேரளா-155, மகாராஷ்டிரா- 133, பஞ்சாப்- 93, பீகார்- 114, அசாம்- 89, லட்சத்தீவு-85, மிசோரம்-85, மேற்குவங்காளம்- 68, ராஜஸ்தான்- 50, ஒடிசா-40, தெலுங்கானா- 30, சத்தீஸ்கர்-27, உத்தரபிரதேசம்-20, டெல்லி-20.


    Next Story
    ×