search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூர்யபிரகாஷ்
    X
    சூர்யபிரகாஷ்

    காங்கயம் நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சூர்யபிரகாஷ் தேர்வு

    தி.மு.க.வை சேர்ந்த 1-வது வார்டில் வெற்றி பெற்ற சூர்யபிரகாஷ் என்பவர் நகராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 15 வார்டுகளிலும் , காங்கிரஸ் 2 , ம.தி.மு.க. ஒரு இடத்திலும் போட்டியிட்டன. அ.தி.மு.க. 17 , த.மா.கா. ஒரு இடத்திலும் போட்டியிட்டது. இதில் தி.மு.க. 10 வார்டுகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 1 , அ.தி.மு.க. 4 , சுயேட்சைகள் 3 ( தி.மு.க. ஆதரவாளர்கள் ) வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

    இந்நிலையில் காங்கேயம் நகராட்சி தலைவர் பதவி கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் 10 -வது வார்டில் போட்டியிட்ட ஹேமலதா என்பவர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் ஒரே ஒரு வார்டில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு நகராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு செய்ததற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு முன்மொழிய கூட வேட்பாளர்கள் இல்லை என்பதால் தி.மு.க.வை சேர்ந்த 1-வது வார்டில் வெற்றி பெற்ற சூர்யபிரகாஷ் என்பவர் நகராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    தி.மு.க. கட்சி தலைமை அறிவித்த வேட்பாளருக்கு பதில் தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் நகராட்சி தலைவராக தேர்வாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நேற்று காங்கயம் நகராட்சியை சேர்ந்த 15 கவுன்சிலர்கள் திடீரென மாயமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×