என் மலர்
உள்ளூர் செய்திகள்

தண்டவாளத்தை கடந்த தொழிலாளி ரெயில் மோதி பலி
செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்த தொழிலாளி ரெயில் மோதி பலி
திருமுல்லைவாயல் ரெயில் நிலையத்தில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்த தொழிலாளி ரெயில் மோதி பலியானார்.
ஆவடி:
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், பெரியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் பழனி (வயது 42). கொத்தனார்.
இவர் இன்று காலை வில்லிவாக்கம் பகுதியில் வேலைக்கு செல்வதற்காக மின்சார ரெயிலில் பயணம் செய்ய திருமுல்லைவாயில் ரயில் நிலையத்துக்கு வந்தார்.
பின்னர் அவர் செல்போனில் பேசியபடியே பிளாட்பாரங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் மின்சார ரயில் வந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிளாட்பாரத்தில் நின்ற பயணிகள் கூச்சலிட்டனர். ஆனால் பழனி செல்போனில் பேசியபடி சென்றதால் அவருக்கு கேட்கவில்லை. மெதுவாக தண்டவாளத்தை கடந்தார்.
அந்த நேரத்தில் மின்சார ரெயில் பழனி மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆவடி ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






