என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  X
  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  தமிழக மக்களை எப்போதும், யாராலும் ஏமாற்ற முடியாது - மு.க.ஸ்டாலின்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்திற்கு உள்ள ஒரே வருவாயான பத்திரப்பதிவு வருவாயையும் ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு என்ற கொள்கை மூலம் பிடுங்க நினைக்கிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
  சென்னை:

  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும்  19-ம் தேதி நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு  அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

  இந்நிலையில், கன்னியாகுமரியில் இன்று காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். அப்போது அவர் பேசியதாவது:

  வெள்ள நிவாரண பாதிப்பிற்கான நிதி வேண்டி கடிதம் எழுதி இருந்தேன். அந்த நிதி இன்னும் வரவில்லை என்றும் எப்போது வரும் என்று தெரியவில்லை.

  தமிழ்நாட்டு திட்டங்களுக்கான நிதி எங்கே என்று கேட்டால் உங்களிடமிருந்து பதில் வராது. ஆனால் வணக்கம் என்று மட்டும் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என பிரதமர் நினைக்கிறார்.

  தமிழக மக்களை எப்போதும், யாராலும் ஏமாற்ற முடியாது. ஏமாறவும் மாட்டார்கள்.

  கூட்டாட்சி தத்துவம் பற்றி ராகுல் காந்தி கூறியது  ஏன் பிரதமருக்கு கசக்கிறது? என தெரிவித்தார்.

  Next Story
  ×