search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ பன்னீர்செல்வம்
    X
    ஓ பன்னீர்செல்வம்

    தி.மு.க. ஆட்சியின் அவலங்களை வீடு தோறும் சொல்ல வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

    தமிழகத்தில் பொற்கால ஆட்சியை கொடுத்தது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா தலைமையிலான அரசு தான் என்பதை மக்கள் தெளிவாக தெரிந்து கொண்டனர் என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது.

    கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றி பேசியதாவது:-

    அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு கட்சி வெற்றிக்கு பாடுபட வேண்டும். 10 மாதங்களுக்கு முன் ஆட்சி பொறுப்புக்கு வந்த தி.மு.க. அரசு வெகு விரைவாக மக்களின் அதிருப்தியை பெற்றுள்ளது. தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டாலும், நிர்வாக திறமையின்மையாலும் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். 

    அ.தி.மு.க. ஆட்சியின் போது ஏற்பட்ட இயற்கை இடர்பாடுகளாகிய மழை, வெள்ளம், கொரோனா காலங்களில் மக்களுக்கு பல்வேறு நிலைகளில் நாம் சிறப்பான பணியை ஆற்றி இருக்கின்றோம். கொரோனா காலத்தில் டெல்லியில் இருந்த தமிழகத்தை சேர்ந்த 900 இஸ்லாமியர்களை தமிழகத்திற்கு அழைத்து வர ஒரு ரெயிலையே ஏற்பாடு செய்து வரவழைத்தோம். 

    மேலும் கொரோனா பாதித்தவர்களுக்கு ராஜ உபசாரத்துடன் கூடிய சிகிச்சையை அளித்தோம். அனைத்து அம்மா உணவங்களிலும் இலவச உணவு வழங்கப்பட்டது. அதே நேரத்தில் தற்போதைய கொரோனா காலத்தில் தி.மு.க.வினர் மக்களை நாடி எந்தவித சேவைகளையும் செய்யவில்லை. பொங்கல் பரிசின் தரம் குறித்து நாடே அறியும். அ.தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தோம். இப்போதைய தி.மு.க. ஆட்சியில் என்ன நடக்கிறது? என்பதை நாம் பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து எடுத்து சொல்லி பொதுமக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற வேண்டும். 

    முக ஸ்டாலின்

    தமிழகத்தில் பொற்கால ஆட்சியை கொடுத்தது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா தலைமையிலான அரசு தான் என்பதை மக்கள் தெளிவாக தெரிந்து கொண்டனர். தி.மு.க. ஆட்சியை பற்றி மக்களே மோசமான விமர்சனங்களை செய்து வருகின்றனர். எனவே நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சி வெற்றிக்கு முழு அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×