என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு புகார்: அமைச்சர்-அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளின் விளக்கங்களை கேட்டதாக தெரிகிறது.
    சென்னை:

    தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் கூறப்பட்டுள்ளது.

    சில இடங்களில் வெல்லம் உருகி இருந்ததாகவும், மிளகில் கலப்படம் செய்து இருந்ததாகவும், பொருட்கள் எடை குறைவாக இருந்ததாகவும், தரம் இல்லாமலும் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து இருந்தார்.

    அதன்படி இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி, உணவுத்துறை செயலாளர் நஜிமுதீன், நிதித்துறை செயலாளர் ஜெகன்நாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளின் விளக்கங்களை கேட்டதாக தெரிகிறது.
    Next Story
    ×