என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
  X
  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

  கொரோனா காலத்தை விடுமுறை என்று எடுக்காமல் பாடங்கள் படிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்- அமைச்சர் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கல்வி தொலைக்காட்சி கடந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்றாலும் இந்த அரசு கல்வி தொலைக்காட்சியை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து தகவல் தொழில் நுட்பத்துறையுடன் ஆலோசனை செய்து வருகிறோம்.

  புதுக்கோட்டை:

  புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

  பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வருகிற 31-ந் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தயவு செய்து இதை விடுமுறை என்று கருதாமல் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், ஆசிரியர்கள் மூலமாக தமிழக அரசு யூடியூபில் 8,000 வீடியோக்களை அப்லோடு செய்து உள்ளது. அதனை பார்த்தும் தொடர்ந்து பாடங்களை படிக்க செய்ய வேண்டும்.

  31-ந்தேதி வரை தொற்று அதிகமாகும் என்று அரசு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அதன் அடிப்படையில் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மாணவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருந்தாலும் ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

  அரசு என்ன சொல்கிறதோ அதன்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் அவர்களிடம் உள்ளது, அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். கல்வி தொலைக்காட்சி கடந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்றாலும் இந்த அரசு கல்வி தொலைக்காட்சியை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து தகவல் தொழில் நுட்பத்துறையுடன் ஆலோசனை செய்து வருகிறோம். வரும் காலங்களில் கல்வி தொலைக்காட்சி மேம்படுத்தப்படும்

  நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசின் நிலைப்பாடு. இதற்காக விலக்கு வேண்டும் என்று சட்டப் போராட்டம் ஒரு வகையில் நடந்து கொண்டிருந்தாலும் மாணவர்களை தயார்படுத்துவதற்காக நாம் தமிழக அரசின் ஹைடெக் ஆய்வகம் மூலமாக பல பகுதிகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது அதை விரிவுபடுத்துவ தற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இன்று திறக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முடிவுற்றது. இந்த கட்டிடம் தரமானதாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டதா என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு நடத்தி சோதனை செய்த பிறகு கட்டிடம் தரமானதாக உள்ளது என்று கூறிய பிறகு தான் திறப்பு விழாவிற்கு நான் அனுமதி அளித்தேன் என்றார்.

  இதையும் படியுங்கள்... முகக்கவசம் அணியாததற்கு வாலிபரை சித்ரவதை செய்வதா? போலீசாருக்கு சீமான் கண்டனம்

  Next Story
  ×