என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  பைபர் படகு வாங்க மானியம் வழங்க கோரி கனிமொழி எம்.பி.யிடம் மீனவர்கள் மனு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு பைபர் மற்றும் கட்டுமர மீனவர் சமுதாயநலச்சங்கத்தினர், கனிமொழி எம்.பி.யை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
  உடன்குடி:

  தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு பைபர் மற்றும் கட்டுமர மீனவர்சமுதாயநலச் சங்கத் தலைவர் கயஸ், செய லாளர் ராஜ் மற்றும்நிர்வாகிகள் கனிமொழி எம்.பி.யை நேரில்சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

   அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

  கடலில்மீன்பிடித்து வாழும் ஏழை மீனவர்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. எனவே மீனவர்களை பாதிக்கக்கூடிய எந்த திட்டங்களும் கடற்கரைப் பகுதியில் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.

  விவசாயிகளுக்கு உதவிட விவசாய கடன் சங்கம் இருப்பதுபோல மீனவர்களுக்கு உதவிட கூட்டுறவு கடன் சங்கம் அமைக்க வேண்டும்.

  பாரம்பரிய மீனவர்கள் பயன்படுத்தும் பைபர் படகு தயாரிக்க பல லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டும்‘ எனவே 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும்.

   புதிய பைபர் படகு வாங்கும் நிலையில் ஏழை மீனவர்கள் இல்லை, அதனால் பழைய பைபர் படகை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

  இதை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனடியாகபதிவு செய்த எரிபொருள் வழங்க வேண்டும்.

  60 வயதுக்கு மேற்பட்டு வறுமையில் வாடும் ஏழை மீனவர்களுக்கு முதியோர் ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும், கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டு கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு நிலுவை யில் உள்ள கடலோர மீனவ கிராமங்கள் அனைத்திற்கும் தூண்டில் வளைவு, மீன் இறங்குதளம் அமைத்திட வேண்டும்.

  கடல் விபத்தில் இறந்து உடல் கிடைக்காத நிலையில் உடன்சென்ற மீனவர்கள் தகவலின் அடிப்படையில் அக் குடும்பத்தின் நிலைமையை கருத்தில் கொண்டு 30 நாட்களுக்குள் இறப்பு சான்றிதழை வழங்கி இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

  தமிழக நாட்டு படகு மீனவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  மனுவை பெற்றுக்கொண்ட கனிமொழி எம்.பி. இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன்கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
  Next Story
  ×