search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.109.20 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.109.20 கோடிக்கு காய்கறிகள் விற்பனையானது
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் சேலம் சூரமங்கலம், ததகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, எடபபடி, ஜலகண்டாபுரம், மேட்டூர், ஆத்தூர், தம்மம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த உழவர் சந்தைகளுக்கு இன்று அதிகாலையிலேயே ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    அவற்றை வாங்க பொதுமக்கள் கூட்டமும் அலைமோதியது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பொதுமக்களை சமூக இடைவெளி விட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சூரமங்கலம் உழவர் சந்தையில் மொத்தம் ரூ.26 லட்சத்து 84 ஆயிரத்து 155க்கும், குறைந்தபட்சமாக ரூ.3 லட்சத்து 68 ஆயிரத்து 564க்கும் காய்கறிகள் விற்பனை ஆனது.

    மாவட்டம் முழ்வதும் உள்ள உழவர் சந்தைகளுக்கு மொத்தம் 303.83 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தன. மொத்தம் ரூ.109.20 கோடிக்கு காய்கறிகள் விற்பனை ஆனது.
    Next Story
    ×