என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்- தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னையில் ஏற்கனவே ரெயில் நிலையங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    சென்னை:

    சென்னையில் கொரோனா வேகமாக பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    சென்னையில் தற்போது பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. போலீசார் அதிரடி சோதனை நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர்.

    முக கவசம்


    இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு மேலும் அதிகரித்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாமல் செல்லும் பொதுமக்களுக்கு அபராதத் தொகையினை ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. முக கவசம் அணிபவர்கள் வாய் மற்றும் மூக்கை நன்கு மூடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான உத்தரவை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார். இதையடுத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். கொரோனாவை தடுக்க பொது மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வெளியே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் ஏற்கனவே ரெயில் நிலையங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×