என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அணை நிரம்பியதால் பொதுமக்கள் கிடாவெட்டி வழிபட்ட காட்சி.
  X
  அணை நிரம்பியதால் பொதுமக்கள் கிடாவெட்டி வழிபட்ட காட்சி.

  வேம்பள்ளியில் சின்னாறு அணை நிரம்பியதால் கிடா வெட்டி வணங்கிய பொதுமக்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக சில ஆண்டுகளாக வறண்டு காணப்பட்ட அணைகளும் நிரம்பி வருகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
  சூளகிரி:

  கிருஷ்ணகிரி மாவட்டம்  சூளகிரி தாலுகா சூளகிரி அருகே வேம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது சின்னாறு அணை.

  இந்த அணை 76 அடி கொள்ள அளவு கொண்ட அணையாகும். இந்த அணைக்கு ஒசூர் கெலவரபள்ளி அணையில் இருந்து வெளியாகும் உபரி நீர் கால்வாய் வழியாக காமன்தொட்டி, மருதாண்டப்பள்ளி வழியாக வந்து துரை ஏரி. நிரம்பி அதன் பின்பு போகிபுரம் வழியாக வந்து சின்னார் அணை நிரம்பும்.

  ஆனால் தண்ணீர் விடாமல் பல ஆண்டுகளாக பொதுப்பணிதுறை மற்றும் சில அரசியல் கட்சியினரும் நாடகம் ஆடி வந்தனர். இந்த நிலையில் சில மாதங்களாக மழை பெய்ததாலும் சில சமூக சேவர்கள்  பணம் செலவுகள் செய்து கால்வாய்கள் முட்கள், செடி, கொடிகளை  சில மாதங்களாக அகற்றியதாலும். சின்னாறு அணைக்கு நீர்வரத்து வர தொடங்கியது.

   இந்த நிலையில் தற்போது சின்னாறு அணை நிரம்பியதால் காமநாயக்கனபேட்டை, கிருஷ்னேப்பள்ளி, கிருஷ்ணா பாளையம், போகிபுரம், ஒன்றியூர், வேம்பள்ளி,ஒன்றிய, தாசனப்புரம், கொள்ளப்பள்ளி, சென்னப்பள்ளி, தேக்கலப்பள்ளி, சின்னார், முருக்கனப்பள்ளி மற்றும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 200-க்கும் மேற்ப்பட்ட விவசாய நிலம் நீர்பாசனம் பெறுவதால் பொதுமக்கள் அணையின் அருகே  கிடா வெட்டி மகிழ்ந்தனர்.
  Next Story
  ×