என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
அண்ணாமலை
எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் வேகம் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிறைவு- அண்ணாமலை
By
மாலை மலர்13 Jan 2022 4:31 AM GMT (Updated: 13 Jan 2022 4:31 AM GMT)

போலீசாரால் தேடப்படுகிற எந்த குற்றவாளிகளுக்கும் பா.ஜ.க.வில் இடம் கிடையாது. அவர்களை போன்றவர்களுக்கு நாங்கள் நிச்சயம் அடைக்கலம் தரமாட்டோம் என்று அண்ணாமலை கூறினார்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்துள்ளார். அதேபோல செம்மொழித் தமிழ் மத்திய நிறுவன வளாகத்தையும் அவர் திறந்து வைத்துள்ளார். ஒரு மாநிலத்தில் ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவக்கல்லூரிகள் கிடைத்த வரலாறு இல்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் வேகம் எடுத்த இப்பணிகள், மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில் நிறைவு பெற்றுள்ளன. இருவருக்கும் நன்றிகள்.
தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்றதாக இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். ஆனால் குற்றம் சாட்டுகிறவர்கள் மீதெல்லாம் வழக்குப்பதிவு என்பதை நிச்சயம் ஏற்கவே முடியாது. எனவே மக்கள் குற்றச்சாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
ரவுடி படப்பை குணா பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக பேசுகிறார்கள். போலீசாரால் தேடப்படுகிற எந்த குற்றவாளிகளுக்கும் பா.ஜ.க.வில் இடம் கிடையாது. அவர்களை போன்றவர்களுக்கு நாங்கள் நிச்சயம் அடைக்கலம் தரமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story
×