search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொலைபேசி
    X
    தொலைபேசி

    கொரோனா - ஒமைக்ரான் நோய் தொற்று தொடர்பாக பொதுமக்கள் தொலைபேசியில் ஆலோசனை பெறலாம்- கலெக்டர் அறிவிப்பு

    கொரோனா - ஒமைக்ரான் நோய் தொற்று முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கட்டுப்பாட்டு அறை ‘வார்ரூம்’ பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா-ஒமைக்ரான் நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

    மேலும் கொரோனா - ஒமைக்ரான் நோய் தொற்று முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கட்டுப்பாட்டு அறை ‘வார்ரூம்’ பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

    இந்த கட்டுப்பாட்டு அறையில் அனைத்து துறை அலுவலர்களும் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். கொரோனா தொடர்புடைய சந்தேகங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்கு பொதுமக்கள் புகார்களை கண்காணிக்கும் எண்:- 044-27237107, 044-27237207, வீட்டில் தனிமைப்படுத்துபவர்களை கண்காணிக்கும் எண்:- 044- 2723 7784, மருத்துவ ஆலோசனை வழங்கும் எண்: 044-2723 7785, வாட்ஸ்- அப் எண்:- 9345440662 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×