என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விபத்தில் மூதாட்டி பலி

    மொடக்குறிச்சி அருகே மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் மூதாட்டி பலியானார். வாலிபர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
    ஈரோடு:

    மொடக்குறிச்சி அருகே மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் மூதாட்டி பலியானார். வாலிபர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த பசலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது75).  இவர்  கடைக்கு செல்வதற்காக அந்த பகுதியில் சாலையோரமாக நடந்து சென்றார். 

    அப்போது கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது மோதியது. 

    இதில் மூதாட்டி முத்தம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த வேல்முருகனுக்கும் காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்தம்மாள் பரிதாபமாக இறந்தார். வேல்முருகன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×