என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
அச்சரப்பாக்கத்தில் கடன் தொல்லையால் காப்பீடு முகவர் தீக்குளித்து தற்கொலை
அச்சரப்பாக்கத்தில் கடன் தொல்லையால் காப்பீடு முகவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:
அச்சரப்பாக்கம் அருகே உள்ள பெரிய கயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (வயது 52). காப்பீடு நிறுவனத்தில் முகவராக உள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் பரவல் காரணமாக தொடர்ந்து புதிதாக பாலிசிதாரர் சேர்க்க முடியாமல் இருந்ததாக தெரிகிறது.
இதனால் போதிய வருமானம் இல்லாததால் தனக்கு சொந்தமான வீட்டை அச்சிறுபாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அடமானம் வைத்து ரூ.5 லட்சம் கடன் பெற்றார்.
இதைத்தொடர்ந்து தனியார் நிறுவன கடனை அடைக்க பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு மோகனுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் மன முடைந்த மோகன் நேற்று இரவு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
Next Story






