என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளையில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
நெல்லை:
பாளை பெருமாள்புரம் அருகே உள்ள ரெட்டியார் பட்டி பகுதியை சேர்ந்தவர் சார்லஸ். இவரது மகன் ஞானராஜ் (வயது 20). பெயிண்டர். இவர் நேற்று குடும்பத்துடன் கிறிஸ்மஸ் விழா கொண்டாடி உள்ளார்.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் ‘கேக்’ வாங்குவதற்காக நெல்லை புதிய பஸ் நிலையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஞானராஜ் படுகாயம் அடைந்தார்.
அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவிலேயே ஞானராஜ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புல னாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






