என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
திருமாவளவன்
தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வந்தது அ.தி.மு.க. - திருமாவளவன்
By
மாலை மலர்25 Dec 2021 12:02 PM GMT (Updated: 25 Dec 2021 12:02 PM GMT)

தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் குரலாக அ.தி.மு.க. திகழ்கிறது. எனவே தமிழக மக்கள் அ.தி.மு.க.வையும், பாரதிய ஜனதாவையும் ஆதரிக்கப்போவதில்லை என திருமாவளவன் கூறியுள்ளார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அருமனையில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. கட்சியின் நிறுவன தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டார். அவர் மேடையில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-
இந்தியாவில் சனாதன தர்மத்திற்கு எதிராக சிறுபான்மையினர் போராடி வருகின்றனர். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி எப்போதும் சிறு பான்மை மக்களுக்கு ஆதரவாகவே இருக்கும். பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் வெறுப்பு அரசியல் நடத்தி வருகிறது. சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு, சமூக நீதிக்கோட்பாடு ஆகியவற்றை ஆதரித்து பெரியாரும், அம்பேத்கரும் வகுத்து தந்த வழியில் நாங்கள் பயணிக்கிறோம்.
சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் சட்டங்களை இயற்றி வருகிறது பாரதிய ஜனதா அரசு, பெண்களின் திருமண வயதை 21 என உயர்த்தியது, பொதுசிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான ஒரு முன்னோட்டம் தான்.
தமிழகத்தில் அ.தி.மு.க. வும், பாரதிய ஜனதா கட்சி பல்வேறு வட மாநிலங்களிலும் மதமாற்ற தடைச்சட்டத்தை அமல்படுத்தியதை யாரும் மறந்துவிடவில்லை. தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் குரலாக அ.தி.மு.க. திகழ்கிறது. எனவே தமிழக மக்கள் அ.தி.மு.க.வையும், பாரதிய ஜனதாவையும் ஆதரிக்கப்போவதில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக காட்வின் ஜேசன் வரவேற்றார். கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணை செயலாளர் காலித், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரமேஷ் குமார், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மேல்புறம் வட்டார தலைவர் ஜாண் கிறிஸ்டோபர் மற்றும் போதகர்கள் பேசினர். மாத்தூர் ஜெயன் நன்றி கூறினார்.
இதையும் படியுங்கள்...சாமானிய மக்கள் பயன் பெறும் வகையில் பிரதமர் மோடி ஆட்சி செய்கிறார் - அமித் ஷா புகழாரம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
