என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மிரட்டல்
  X
  மிரட்டல்

  பெரியகுளம் அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரியகுளம் அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பெரியகுளம்:

  பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 49). கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் இருந்த அதே ஊரை சேர்ந்த முருகன் என்பவர் பாண்டியனை தள்ளி விட்டதாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட அவரை, முருகன் கத்தியால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு முருகன் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தென்கரை போலீசில் பாண்டியன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×