என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மறியலில் ஈடுபட்ட 68 பெண் தொழிலாளர்கள் கைது
    X
    மறியலில் ஈடுபட்ட 68 பெண் தொழிலாளர்கள் கைது

    தொழிற்சாலை ஊழியர்களுக்கு ஆதரவாக ஒரகடத்தில் மறியலில் ஈடுபட்ட 68 பெண் தொழிலாளர்கள் கைது

    ஸ்ரீபெரும்புதூர் அருகே மறியலில் ஈடுபட்டயில் 68 பெண் தொழிலாளர்கள் மற்றும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த தொழிற்சங்க நிர்வாகிகள் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளசுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், பூந்தமல்லி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடுதிகளில் தங்கி ஏராளமான பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    கடந்த 15-ந்தேதி பூந்தமல்லி அருகே உள்ள விடுதிகளில் தங்கியிருந்த பெண் தொழிலாளர்களுக்கு உணவை சாப்பிட்டதால் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சுமார் 200 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்கை பெற்ற 8 பேர் உயிரிழந்ததாக தொழிலாளர்கள் மத்தியில் வதந்தி பரவியது. அவர்களை பற்றிய விபரத்தை தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவிக்க வில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பெண்தொழிலாளர்கள் உள்பட சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் சுங்குவார்சத்திரத்தில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலை முன்பு சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதேபோல் தொழிலளார்களுக்கு ஆதரவாக ஒரகடம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதியில் தங்கி இருந்தவர்களும் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    அவர்களிடம் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கணேசன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது காணவில்லை என்று கூறப்பட்ட பெண் தொழிலார்கள் சிலரிடம் கலெக்டர் ஆர்த்தி வீடியோ காலில் பேசினார். அனைவரும் நலமுடன் இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஆர்த்தி, மற்றும் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், கணேசன் ஆகியோர் உறுதிஅளித்தனர். இதையடுத்து தொழிலாளர்களின் 16 மணிநேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

    சுங்குவார் சத்திரம் பாக்ஸ்கான் தொழிற்சாலை அருகே நடைபெற்ற போராட்டத்தை தொழிலாளர்கள் கைவிட்ட நிலையிலும், ஒரகடம் பகுதியில் செயல்பட்ட விடுதியில் தங்கியிருந்த பெண் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டயில் 68 பெண் தொழிலாளர்கள் மற்றும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த தொழிற்சங்க நிர்வாகிகள் 22 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காஞ்சீபுரம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×