search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி
    X
    ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி

    ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஜெயலலிதா நினைவிடத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்துக்கு சசிகலா இன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அவர் அஞ்சலி செலுத்தியபோது கண்களில் கண்ணீர் கசிந்தது. கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய அவர் சிறிது நேரம் அங்கு மவுனம் கடைபிடித்தார்.

    அவருடன் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார்கள். முன்னாள் அமைச்சர் சைதை ஜி.செந்தமிழன், சி.ஆர்.சரஸ்வதி, திருச்சி மனோகரன், அம்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. வேதாச்சலம் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் வந்திருந்தனர்.

    முன்னதாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஜெயலலிதா நினைவிடத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

    ஜெயலலிதா நினைவிடத்தில் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார்

    அவருடன் துணை பொதுச் செயலாளரான முன்னாள் அமைச்சர் சைதை ஜி.செந்தமிழன், பொருளாளர் திருச்சி மனோகரன், செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, கரிகாலன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள் ஏராளமானோர் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    அதன் பிறகு அங்கு டி.டி.வி.தினகரன் தலைமையில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த உறுதிமொழியில் தீய சக்திகளிடமிருந்து அன்னை தமிழகத்தை காத்திட, நம் புரட்சித் தலைவியால் உருவாக்கப்பட்டு, நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவால் கட்டி காக்கப்பட்ட இயக்கம், ஒரு சிலரின் சுயநலத்தால், தன் தனித்தன்மையையும், அடையாளத்தையும் இழந்துவிட்ட நிலையில், நம் தலைவர்களின் லட்சியங்களை அ.ம.மு.க. எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு மீட்டெடுத்தே தீருவோம்.

    மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற வைர வரிகளை தன் வைராக்கிய வாழ்க்கையாக கொண்டு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தவ வாழ்வாக தன் வாழ்வை அமைத்து அம்மா என்கிற அன்புச்சொல்லால், தமிழக வரலாற்றிலும், தமிழ்நாட்டு மக்களின் இதயங்களிலும் என்றும் நிலைத்திட்ட நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா காட்டிய பாதையில், மக்களோடு நாம் மக்களுக்காக நாம் என்கிற தாரக மந்திரத்தோடு தொடர்ந்து பயணிக்க உண்மை தொண்டர்களாகிய நாம் இந்நாளில் உறுதி ஏற்கிறோம்.

    இவ்வாறு உறுதிமொழி எடுத்தனர்.

    மொத்தம் 6 உறுதிமொழிகள் ஏற்கப்பட்டது.



    Next Story
    ×