search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் மீறல்: முகக்கவசம் அணியாத 1,137 பேர் மீது வழக்குப்பதிவு

    கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முகக்கவசம் அணியாத 1,137 நபர்கள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, 21.06.2021 காலை முதல் 15.12.2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதனையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், முறையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 வாகன தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகளில் வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து, தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக, 27.11.2021 முதல் 04.12.2021 வரையிலான ஒருவார காலத்தில் மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 613 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 9 ஆட்டோக்கள் என மொத்தம் 622 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

    முகக்கவசம் அணியாத 1,137 நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 13 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா நோய் தொற்றை தடுக்க வேண்டும் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
    Next Story
    ×