search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரங்கசாமி
    X
    ரங்கசாமி

    அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்- ரங்கசாமி வேண்டுகோள்

    தானாக முன்வந்து அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்தார்.
    புதுச்சேரி:

    கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சர் கொரோனா நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50 ஆயிரம் வழங்குவதை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. மத்திய அரசு தனியாக ரூ.50 ஆயிரம் வழங்குகிறது.

    புதுவையில் 1,847 பேர் இதுவரை கொரோனாவினால் இறந்துள்ளனர். தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல்கட்ட தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். 2-வது கட்ட தடுப்பூசியை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போட்டுள்ளனர். உயிரிழப்புகளை தடுக்க அனைவரும் தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    புதுவையில் தடுப்பூசி தட்டுப்பாடு என்பது இல்லை. அரசிடம் தேவையான அளவுக்கு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

    பேட்டியின்போது அமைச்சர் லட்சுமிநாராயணன், சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×