search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் துரைமுருகன்
    X
    அமைச்சர் துரைமுருகன்

    இது என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா?- பிரசாரத்தில் வெளுத்து வாங்கிய அமைச்சர் துரைமுருகன்

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு மக்களின் உயிரை காப்பாற்றியுள்ளதாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட ஆரிமுத்துமோட்டூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் துரைமுருகன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் கேட்காமலேயே ஓட்டு போடுவிங்க. ஆனா, யாராவது ஒருத்தர் “துரைமுருகன் வந்து ஓட்டு கேட்டானானு சொல்லக்கூடாது என்பதற்காக ஓட்டு கேட்க வந்துள்ளேன்.

    பஞ்சாயத்து தலைவர் நல்லவனா இருந்தா 30 லைட்டையும் ஊருக்கு போடுவார். கெட்ட தலைவனா இருந்தா 5 லைட்டு போட்டு மீதிய பொண்டாட்டிக்கு கம்மல்லா போட்டுருவார். அதனால நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    புதியதாக கிணறு, ஆழ்துளை கிணறு அமைக்கும் விவசாயிகளுக்கு ஒரே மாதத்தில் மின்சாரம் எங்கள் ஆட்சியில் கொடுக்கப்படும்.

    ஆட்சிக்கு வந்த இந்த 3 மாதத்தில் என்ன செய்தீர்கள் என கேட்கிறார்கள். பிள்ளை பிறக்கவே 10 மாதம் ஆகிறது. இந்த 3 மாதத்தில் என்ன செய்ய முடியும்.

    பஸ்சில் பெண்களுக்கு இலவசம் என அறிவித்துள்ளோம். இலவசமாக பெண்கள் பஸ்சில் சென்றால் கண்டக்டர் ஒரு மாதிரி பாக்குறார். பாவம் அவருக்கு கலெக்‌ஷன் குறையுதேனு கவலை. பெண்கள் பஸ்சில் ஏறியதும் கண்டக்டர் போ அப்படி போய் உட்காரு என்கிறார். அப்படிப்பட்டவர்களை முறத்தால் அடிக்க வேண்டும்.

    அரசு பேருந்து

    அரசு பஸ் என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா? எந்த கண்டக்டராவது பெண்களை தப்பா பேசுனா என்கிட்ட சொல்லுங்க. அது யாராக இருந்தாலும் அவரை வேலையை விட்டு தூக்கிடுவேன்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு மக்களின் உயிரை காப்பாற்றியுள்ளோம். எல்லாரும் 2 தவணை தடுப்பூசி ஊசி போட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    Next Story
    ×