என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரியோடு எரிந்து 150 நெல் மூட்டைகள் நாசம்
    X
    லாரியோடு எரிந்து 150 நெல் மூட்டைகள் நாசம்

    காரைக்குடி அருகே லாரியோடு எரிந்து 150 நெல் மூட்டைகள் நாசம்

    காரைக்குடி வடக்கு போலீசார் நடத்திய விசாரணையில் என்ஜின் கோளாறு காரணமாக லாரி தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்தது.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பகுதியில் இருந்து சுமார் 150 நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று மாலை கோவிலூர் நெல்குடோனுக்கு சென்று கொண்டு இருந்தது. அந்த லாரி காரைக்குடி வாட்டர் டேங்க் பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    உடனே லாரியை ஓட்டி வந்த டிரைவர் அதை நிறுத்தி விட்டு தப்பினார். இதுகுறித்து காரைக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் லாரி முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. லாரியில் இருந்த 150 நெல் மூட்டைகளும் எரிந்து நாசமாயின.

    இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் நடத்திய விசாரணையில் என்ஜின் கோளாறு காரணமாக லாரி தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்தது.
    Next Story
    ×