என் மலர்
செய்திகள்

அதிமுக-பாஜக
சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு: அதிமுக-பாஜக இன்று பேச்சுவார்த்தை
தமிழக சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பாஜக இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
சென்னை:
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.
இதனிடையே, அதிமுக கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி அக்கூட்டணியில் இருந்து விலகி இந்திய ஜனநாயக கட்சியுடன் இணைந்துள்ளது.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே இன்று பேச்சுவார்த்தை தொடங்கியது.
இதற்காக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷண்ரெட்டி, சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். இதைத் தொடர்ந்து பாஜக குழு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்தித்து பேசுகின்றனர்.
Next Story