என் மலர்

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    மதுரை அருகே பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மதுரை அருகே பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதூர்:

    மதுரை கோ.புதூர் லேக் ஏரியா டி.டி.சி. நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மனைவி சவுந்தர்யா (வயது21). சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் வீட்டில் அமர்ந்திருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க மர்மநபர் ஒருவர், வீட்டுக்குள் புகுந்து கத்தியைக் காட்டி சவுந்தர்யா அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துள்ளார். இதனை தடுக்க முயன்ற கணவர் பிரகாசை, மர்ம நபர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து சவுந்தர்யா அளித்த புகாரின் பேரில் கோ.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×