என் மலர்
செய்திகள்

மின்னல் தாக்கி இறந்து போன ஆடுகள்.
வேலூர் அருகே மின்னல் தாக்கி 22 ஆடுகள் பலி
வேலூர் அருகே மின்னல் தாக்கியதில் மேய்ச்சலுக்கு சென்ற 22 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.
அடுக்கம்பாறை:
அடுக்கம்பாறையை அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமம், திப்பைமேடு பகுதியை சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது 40). இவர், ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல பிச்சாண்டி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். ஆற்காட்டான் குடிசை செல்லும் சாலையில் உள்ள தனியார் காவலர் பயிற்சி பள்ளி அருகே ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் பிச்சாண்டி வளர்த்து வந்த 22 ஆடுகள் பரிதாபமாக செத்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூர் தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் ரீனா, கால்நடை மருத்துவர் மற்றும் வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






