என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 113 பேருக்கு கொரோனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 113 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  திருப்பத்தூர்:

  திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,963 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 76 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

  இதேபோல ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 191 ஆக உயர்ந்துள்ளது. இதில் 353 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இதில், ராணிப்பேட்டை சோமு முதலி தெருவை சேர்ந்த 26 வயது பெண், நவல்பூர் ஒத்தவாடை தெருவை சேர்ந்த 24 வயது ஆண், சிப்காட் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த 45 வயது ஆண், பெல் அண்ணாநகரை சேர்ந்த 57 வயது ஆண், லாலாபேட்டை மேலாண்டை தெருவை சேர்ந்த 46 வயது ஆண், அக்ராவரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் 18 வயது பெண், அம்மூர் இந்தியன் வங்கியை சேர்ந்த 31 வயது ஆண், கல்புதூர் பகுதியை சேர்ந்த 20 வயதுப் பெண் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அரசு, மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  Next Story
  ×