search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்
    X
    பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்

    பிளாஸ்டிக் பொருட்களை விற்ற வியாபாரிகளுக்கு ரூ.10,500 அபராதம்- அதிகாரிகள் நடவடிக்கை

    கோத்தகிரி பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை விற்ற வியாபாரிகளுக்கு ரூ.10,500 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
    கோத்தகிரி:

    தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பலவகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ விற்பனை செய்யவோ அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவின் உத்தரவுப்படி நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு துறை அதிகாரிகள் கடைகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனையில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி கோத்தகிரி பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளில் பிளாஸ்டிக் சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சோதனையில் உணவு பொருட்களை பேக்கிங் செய்வதற்காக கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததுடன், பிளாஸ்டிக் பொருட்களை விற்ற வியாபாரிகளுக்கு மொத்தம் ரூ.10 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
    Next Story
    ×