என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்11 Sep 2020 5:58 AM GMT (Updated: 11 Sep 2020 5:58 AM GMT)
தமிழகத்தில் சட்டசபை கூட உள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி நிறைவடைந்தது. அதற்கு பிறகு இம்மாதம் 14-ந் தேதி சட்டசபையை மீண்டும் கூட்ட முடிவு செய்யப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையை கூட்டாமல் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
14-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
சட்டசபை கூட்டம் கூட உள்ளதையொட்டி எம்.எல்.ஏக்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. எம்.எல்.ஏக்களின் வீடுகளுக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

Next Story
×