என் மலர்

  செய்திகள்

  அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்ட காட்சி.
  X
  அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்ட காட்சி.

  அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அஞ்சலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முக ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
  சென்னை:

  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து காணொலி வாயிலாக பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

  திமுக பொதுக்குழுவில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

  உள்ளம் கவர்ந்த தம்பி என்று ராஜாவை கருணாநிதி பாராட்டியுள்ளார். வரும் 15ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழா நடைபெறும். மூத்த நிர்வாகிகள் மட்டும் பங்கேற்கும் விழா அது.

  மிக எளிமையாக முப்பெரும் விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. 5 மாதம் கொரோனாவால் கழிந்து விட்டது. இனி நீங்கள் விரைந்து செயல்பட வேண்டும். நாம் தான் ஆட்சிக்கு வர போகிறோம். 10 ஆண்டுகளில் தமிழகம் பின்னோக்கி வந்துள்ளது.

  இவ்வாறு அவர் பேசினார்.

  அதனைதொடர்ந்து அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். துணை பொதுச்செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆ.ராசா, பொன்முடி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
  Next Story
  ×