என் மலர்

  செய்திகள்

  குஷ்பு
  X
  குஷ்பு

  குஷ்புவின் வித்தியாசமான ஆசிரியர் தின வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பு வித்தியாசமாக தனது ஆசிரியர் தின வாழ்த்தை பதிவு செய்து இருந்தார்.
  சென்னை:

  ஆசிரியர் தினத்திற்கு தலைவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் தங்கள் ஆசிரியர்களை நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

  காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பு வித்தியாசமாக தனது ஆசிரியர் தின வாழ்த்தை பதிவு செய்து இருந்தார். அதில் மறைந்த கருணாநிதியே தனக்கு ஆசிரியர் என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

  பொறுப்பு, மரியாதை மற்றும் கண்ணியத்துடன் ஒரு அரசியல்வாதியாக இருக்க எனக்கு கற்றுக்கொடுத்த இந்த ஒரு பெரிய மனிதருக்கு நான் நன்றி தெரிவிக்காவிட்டால் என் நாள் முடிவடையாது.

  மறைந்த டாக்டர் கருணாநிதி நான் அரசியலில் நுழைந்த போது எனக்கு ஒரு சிறந்த ஆசிரியர். எப்போதும் அவரை மிக உயர்ந்த மதிப்பில் வைத்திருப்பேன்.

  இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
  Next Story
  ×