என் மலர்

  செய்திகள்

  பொன் ராதாகிருஷ்ணன்
  X
  பொன் ராதாகிருஷ்ணன்

  நயினார் நாகேந்திரன் கூறியதில் தவறு ஒன்றும் இல்லை- பொன்.ராதாகிருஷ்ணன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கன்னியாகுமரி இடைத்தேர்தலில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவேன் என்று முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூறியதில் தவறு ஒன்றும் இல்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
  நாகர்கோவில்:

  கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் கட்சி மேலிடம் வாய்ப்பளித்தால் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட தயாராக இருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருந்தார்.

  நயினார் நாகேந்திரனின் இந்த திடீர் அறிவிப்பு பாரதிய ஜனதாவினர் மத்தியிலும், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டது.

  இதுகுறித்து முன்னாள் மத்திய மந்திரியும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டவருமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

  கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவேன் என்று முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூறியதில் தவறு ஒன்றும் இல்லை. கட்சி மேலிடம் வாய்ப்பளித்தால் நான் போட்டியிடுவேன்.

  குமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடக்கும் என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். வசந்தகுமார் மறைவு காரணமாக அனுதாப அலை இருக்காது. 2014-2019 ஆண்டு கால பாரதிய ஜனதா ஆட்சியில் நடைபெற்ற திட்டங்கள் அதன்பின் நடைபெற்றதா? என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

  தமிழகத்தில் வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணியா? பாரதிய ஜனதா தலைமையில் கூட்டணியா? என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா அங்கம் வகிக்கும் கூட்டணி தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×