search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    ஆன்-லைன் ரம்மி சூதாட்டத்தை தடைசெய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

    புதிய விதிகளை உருவாக்கியோ, ஏற்கெனவே உள்ள விதிகளின் படியோ ஆன்-லைன் ரம்மி சூதாட்டத்தை உடனடியாக தடைசெய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை :

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    17 ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் தலைவிரித்தாடிய பரிசுச்சீட்டு கலாசாரத்தால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன. பா.ம.க. தான் தொடர்ச்சியான போராட்டங்களால் அந்த கலாசாரத்திற்கு முடிவுகட்டியது. அதேபோல், இப்போது ஆன்-லைன் சூதாட்டங்களுக்கும் முடிவு கட்டப்படவேண்டும். இல்லாவிட்டால் இளைஞர் சமுதாயத்தை சீரழிவில் இருந்து காப்பாற்றமுடியாது.

    சூதாட்டங்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின்போது, ‘ஆன்-லைன் ரம்மி சூதாட்டமா? என்ற வினாவே எழவில்லை’ என்று சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டது. அதை பயன்படுத்திக்கொண்டு அனைத்து ஆன்-லைன் சூதாட்ட நிறுவனங்களும் ஒவ்வொருநாளும் கோடிக்கணக்கான இளைஞர்களை நடுத்தெருவுக்கு கொண்டுவருகின்றன.எனவே, புதியவிதிகளை உருவாக்கியோ, ஏற்கெனவே உள்ள விதிகளின்படியோ ஆன்-லைன் ரம்மி சூதாட்டத்தை உடனடியாக தடைசெய்ய மத்தியமாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×