என் மலர்
செய்திகள்

விளக்குகள்
ஈரோடு மாவட்டத்தில் வீட்டு வாசலில் விளக்குகள் வைத்து வழிபாடு செய்த பெண்கள்
ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளிலும் நேற்று மாலை பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டு 9 அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தனர்.
சூரம்பட்டி:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைக்கப்பட்டு உள்ள உத்தரவு பெட்டியில் பக்தர்களின் கனவில் வரும் பொருட்களை வைத்து அவ்வப்போது பூஜை செய்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. இப்போது இந்த உத்தரவு பெட்டியில் மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கட்டப்பட்டு திருமாங்கல்யம் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் வெள்ளிக்கிழமை அன்று மாலை தங்கள் வீட்டு வாசல் முன்பு மஞ்சள் நீர் தெளித்து கோலம் போட்டு அதில் 9 அகல் விளக்குகளை ஏற்றி சுமங்கலி பெண்கள் வழிபட்டால் கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பார். மேலும் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும் என்று கூறப்பட்டது.
இதையொட்டி ஈரோடு, சூரம்பட்டி, அணைக்கட்டு, செட்டிபாளையம், பெரிய செட்டி பாளையம், மூலப்பாளையம் மற்றும் அந்தியூர், சத்தியமங்கலம், கோபி, கவுந்தப்பாடி உள்பட ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளிலும் பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டு 9 அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தனர்.

Next Story