என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சைக்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்து விடும் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
By
மாலை மலர்27 April 2020 9:10 AM GMT (Updated: 27 April 2020 9:10 AM GMT)

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சைக்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்துவிடும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியத்தில் மிரட்டுநிலை கிராமத்தில் 23 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மிரட்டுநிலையில் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மிரட்டுநிலை கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாவட்ட நிர்வாகத்துடன் அனைத்து துறைகளும் இணைந்து கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா தொற்று ஒருவருக்கு வந்ததால் 8 கி.மீ. சுற்றளவு 48 கிராமங்கள் மாவட்ட நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து 522 வீடுகள், 45 ஆயிரம் பேரை முழுமையாக கண்காணிக்கிறார்கள். இந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் உள்ளே வரவும், வெளியே செல்லவும் முடியாது.
நடமாடும் மருத்துவ குழுக்கள், கிருமிநாசினி தெளிப்பு உள்பட கண்காணிப்பு பணிகள் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருப்பதில் முன்மாதிரியாக திகழ்கிறது. இதற்காக மாவட்ட நிர்வாகத்தை பாராட்டுகிறேன். கண்காணிப்பு, தொடர் கண்காணிப்பு, முழுமையான கட்டுக்குள் என இந்த கிராமங்களை மாவட்ட நிர்வாகம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதால் மேலும் பரவல் இல்லாத நிலை உருவாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகிற இந்தநிலை போல தான், தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கண்காணிப்பு திட்டத்தில் செயல்படுத்துகிறோம். மாவட்ட நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்போடு கிராமங்களில் எளிதில் செய்ய முடிகிறது. சென்னை போன்ற 1½ கோடி மக்கள் தொகை இருக்கிற பெரு நகரங்களில் இப்பணி சவாலாக இருக்கிறது. இருந்தாலும் கூட முழுமையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டையில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட அனுமதி கிடைத்துள்ளது. ஒரு நாளைக்கு 300 மாதிரிகளை பரிசோதனை செய்யக்கூடிய அளவிற்கு வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகமாக உள்ளது. இதில் 30 அரசு மருத்துவமனைகளிலும், 11 தனியார் மருத்துவமனைகளிலும் என 41 பரிசோதனை மையங்கள் உள்ளன.

தமிழகத்தில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. தொற்று எண்ணிக்கையை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்மா சிகிச்சைக்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். இந்த வாரத்தில் அதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அதற்கான உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைத்துள்ளோம். இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்க தயார் நிலையில் அரசு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இந்த ஆய்வின் போது கலெக்டர் உமாமகேஸ்வரி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் அர்ஜூன்குமார் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியத்தில் மிரட்டுநிலை கிராமத்தில் 23 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மிரட்டுநிலையில் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மிரட்டுநிலை கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாவட்ட நிர்வாகத்துடன் அனைத்து துறைகளும் இணைந்து கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா தொற்று ஒருவருக்கு வந்ததால் 8 கி.மீ. சுற்றளவு 48 கிராமங்கள் மாவட்ட நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து 522 வீடுகள், 45 ஆயிரம் பேரை முழுமையாக கண்காணிக்கிறார்கள். இந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் உள்ளே வரவும், வெளியே செல்லவும் முடியாது.
நடமாடும் மருத்துவ குழுக்கள், கிருமிநாசினி தெளிப்பு உள்பட கண்காணிப்பு பணிகள் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருப்பதில் முன்மாதிரியாக திகழ்கிறது. இதற்காக மாவட்ட நிர்வாகத்தை பாராட்டுகிறேன். கண்காணிப்பு, தொடர் கண்காணிப்பு, முழுமையான கட்டுக்குள் என இந்த கிராமங்களை மாவட்ட நிர்வாகம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதால் மேலும் பரவல் இல்லாத நிலை உருவாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகிற இந்தநிலை போல தான், தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கண்காணிப்பு திட்டத்தில் செயல்படுத்துகிறோம். மாவட்ட நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்போடு கிராமங்களில் எளிதில் செய்ய முடிகிறது. சென்னை போன்ற 1½ கோடி மக்கள் தொகை இருக்கிற பெரு நகரங்களில் இப்பணி சவாலாக இருக்கிறது. இருந்தாலும் கூட முழுமையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டையில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட அனுமதி கிடைத்துள்ளது. ஒரு நாளைக்கு 300 மாதிரிகளை பரிசோதனை செய்யக்கூடிய அளவிற்கு வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகமாக உள்ளது. இதில் 30 அரசு மருத்துவமனைகளிலும், 11 தனியார் மருத்துவமனைகளிலும் என 41 பரிசோதனை மையங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இந்த ஆய்வின் போது கலெக்டர் உமாமகேஸ்வரி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் அர்ஜூன்குமார் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story
×