என் மலர்
செய்திகள்

கைது
மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து தர்ணா போராட்டம்: காங்கிரஸ்-திமுக கூட்டணி கட்சியினர் கைது
புதுவையில் நிதி வழங்காத மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து தர்ணா போராட்டம் நடத்த வந்த காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
கொரோனா தொற்றை தடுக்கவும், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் மத்திய அரசிடம் புதுவை அரசு ரூ.995 கோடி நிவாரண நிதி கேட்டு வலியுறுத்தி வருகிறது.
பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சில் பேசிய போதும், கடிதம் மூலமும் நிவாரண நிதி அளிக்க முதல் -அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார். ஆனால், மத்திய அரசு இதுவரை நிதி வழங்கவில்லை.
மாநில அரசுகளுக்கு நிதி வழங்கிய மத்திய அரசு யூனியன் பிரதேசமான புதுவைக்கு நிதி அளிக்காதது புதுவை மக்களை வஞ்சிக்கும் செயல் என காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அதோடு நிதி அளிக்காத மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) கருப்பு கொடியுடன் தர்ணா போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்தன.
இதன்படி இன்று காலை 10 மணிக்கு தர்ணா போராட்டம் நடத்துவதற்காக மிஷன் வீதி, ஜென்மராக்கினி கோவில் அருகில் காங்கிரஸ், தி.மு.க கூட்டணியினர் கருப்புக் கொடியுடன் திரண்டனர். மாநில கம்யூனிஸ்டு தலைவர் சலீம் தலைமையில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், தி.மு.க. அமைப்பாளர்கள் சிவக்குமார், சிவா எம்.எல்.ஏ, வெங்கடேசன் எம்.எல்.ஏ, மார்க்சிஸ்டு பிரதேச செயலாளர் ராஜங்கம், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ, நாரா.கலைநாதன், மார்க்சிஸ்டு முன்னாள் செயலாளர்கள் பெருமாள், முருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கருப்புக்கொடி ஏந்தி, கருப்பு பேட்ஜ் அணிந்து திரண்டனர்.
இதையடுத்து போலீசார் ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி போராட்டம் நடத்தக்கூடாது என்று கூறி அவர்களை கைது செய்தனர். கைது செய்தவர்களை தனித்தனி வாகனங்களில் ஏற்றி வெவ்வேறு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக கடற்கரை சாலையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளதால் தலைமை தபால் நிலையத்திற்கு போராட்ட இடத்தை மாற்றினர். இதற்காக ஜென்மராக்கினி கோவில் அருகில் அவர்கள் திரண்டபோது கைது செய்யப்பட்டனர்.

Next Story