என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.
    X
    மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.

    வேதாரண்யம் பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை- மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

    வேதாரண்யம் பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் மீனவர்கள் வேலை இழந்து சொல்லொண்ணாத கஷ்டத்தில் முடங்கி கிடக்கின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதியில் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த மீனவ கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் பைபர் படகு மற்றும் விசைபடகு மூலம் மீன்பிடிக்கச் சென்று பல லட்சம் மதிப்புள்ள மீன்களை பிடித்து வந்து விற்பனை செய்து வந்தனர்.

    இந்த மீன்கள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், உள்ளுர் சில்லறை வியாபாரிகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் மீன்பிடி தொழில் தடை செய்யப்பட்டு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்கள் வரத்து இல்லை. அதிகளவில் மீன்கள் கிடைத்த காலத்தில் விற்பனை செய்தது போக மீதமுள்ள மீன்களை மற்றும் தங்கியுள்ள மீன்களை மீனவ குடும்பத்தினர் கருவாடுக்கு பயன்படுத்தி அதை உப்பு வைத்து காயவைக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தனர்.

    தற்போது அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. இதனால் இந்த பகுதியில் மீனவர்கள் வேலை இழந்து சொல்லொண்ணாத கஷ்டத்தில் முடங்கி கிடக்கின்றனர். என்றைக்கு தங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் நீங்கி விடிவு காலம் எப்போது வரும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    Next Story
    ×