என் மலர்
நீங்கள் தேடியது "வாழ்வாதாரம் பாதிப்பு"
- அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு தடையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
- இது சம்பந்தமாக ராமநாதபுரம் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகர் கேபிள் டி, வி. ஆபரேட்டர்கள் சங்கத்தினர் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் நகர் பகுதியில் சுமார் 30 ஆயிரம் கேபிள் டி.வி. இணைப்புகள் உள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக கேபிள் டி.வி. தொழில் செய்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி முதல் அரசு கேபிள் டி.வி. இயங்கவில்லை. இதனால் அத்தனை இணைப்புகளையும் தற்போது இழந்து வரும் சூழ்நிலை உள்ளது.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தனியார் சேவைக்கு மாறி வருகின்றனர். இதனால் கடந்த 30 வருடங்களாக வளர்த்து வந்த தொழிலை இழக்கும் சூழ்நிலையை அரசு கேபிள் டி.வி. நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இது சம்பந்தமாக அரசு கேபிள் டி.வி. நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது உடனடியாக வரும் என்று தொடர்ந்து வாய் வார்த்தைகளாகவே கூறி வருகின்றனர், ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. அதனால் கேபிள் டி.வி.களுக்கு நோடல் அதிகாரியான தங்களை நாடி வந்துள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






