என் மலர்

  செய்திகள்

  செயின் பறிப்பு
  X
  செயின் பறிப்பு

  அருமனை அருகே மூதாட்டியிடம் செயின் பறித்த சிறுவன் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அருமனை அருகே விட்டின் முன்பு உறவினர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற சிறுவன் கைது செய்யப்பட்டார்.

  நாகர்கோவில்:

  அருமனை காரோடு பகுதியை சேர்ந்தவர் ரெஞ்சிதம் (வயது 72).

  இவர் நேற்று காலையில் தனது வீட்டின் முன்பு உறவினர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ரெஞ்சிதத்தின் பின்பக்கமாக சிறுவன் ஒருவன் வந்தான். அவன் அவரது கழுத்தில் கிடந்த செயினை பறித்தார்.

  இதில் சுதாரித்துக் கொண்ட ரெஞ்சிதம் செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு திருடன், திருடன் என கூச்சலிட்டு அலறினார். அதற்குள் அந்த சிறுவன் அவரது கையை தட்டிவிட்டு கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க செயினை பறித்துச் சென்றான்.

  அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அவர்கள் அந்த சிறுவனை விரட்டிச் சென்று சிறிது தூரத்தில் மடக்கிப்பிடித்தனர். இது குறித்து அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த சிறுவனை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

  இதையடுத்து போலீசார் அவனிடம் இருந்த செயினை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×