என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கைது
மத்தூர் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது
By
மாலை மலர்19 Jan 2020 5:19 PM GMT (Updated: 19 Jan 2020 5:19 PM GMT)

மத்தூர் அருகே முன்விரோத தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள அங்கம்பட்டி செவத்தான்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மாதப்பன் (வயது45). இவருக்கும் இவரது அண்ணன் மகன் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (28) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இதனால் நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்தசாமி கத்தியால் மாதப்பனை சரமாரியாக குத்தியுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த மாதப்பனை மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து அவர் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் தொழிலாளியை தாக்கியதாக கோவிந்தசாமியை கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story
×