என் மலர்
செய்திகள்

ஜெயலலிதா
நாளை நினைவு நாள்: ஜெயலலிதா படத்துக்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை-அன்னதானம்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினம் நாளை (5-ந் தேதி) அனுஷ்டிக்கப்படுகிறது. அவரது திருவுருவப்படத்துக்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
மதுரை:
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1 1/2 கோடி கழக தொண்டர்களின் இதய தெய்வமாக விளங்கி வரும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினம் நாளை (5-ந் தேதி) அனுஷ்டிக்கப்படுகிறது.
இதையொட்டி மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றியம், நகரம், பேரூர், வார்டு பகுதிகளில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்தப்படும் வகையில் அவரது திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.
ஒன்றியம், நகரப் பகுதிகளில் அ.தி.மு.க. வினர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்று தங்களது இதய அஞ்சலியை சமர்ப்பிக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story






