search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு ரெயில் நிலையம்
    X
    ஈரோடு ரெயில் நிலையம்

    பட்டாசுகள் கொண்டு செல்லப்படுகிறதா?- ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

    தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ரெயிலில் வரும் பயணிகள் பட்டாசு கொண்டு செல்கிறார்களா? என்பதை கண்காணிக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை சீர்குலைக்க தமிழகத்தில் பயங்கரவாதிகள் முயற்சிக்க கூடும் என்று உளவுத்துறை போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்பட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயிலில் வரும் பயணிகள் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி யாராவது பட்டாசு கொண்டு செல் கிறார்களா? என்பதை கண் காணிக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு ரெயில் நிலையத்துக்கு தினமும் 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. இதனால் ஈரோடு ரெயில் நிலையம் எப்போதும் மக்கள் கூட்டமாக காட்சி அளிக்கும். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ரெயிலில் வரும் பயணிகள் பட்டாசு கொண்டு செல்கிறார்களா? என்பதை கண்காணிக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு ரெயில் உள்ள முதல் நடைமேடை 2-வது நடை மேடை 3-வது நடை மேடை மற்றும் 4-வது நடை மேடையில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் ரெயில் நிலையம், நுழைவாயில் பகுதி உள்பட ரெயில் நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று ரெயில்வே சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனை செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி ரெயில் நிலையத்துக்கு உள்ளே அனுமதித்தனர். மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டும் சோதனை செய்யப்பட்டது.

    சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரித்து அவர்கள் முகவரி தொலைபேசி எண்களை வாங்கி கொண்டு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    Next Story
    ×