search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கிய கணவர் கைது

    வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கிய கணவர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை செய்தனர்.

    போரூர்:

    வளசரவாக்கம் லட்சுமி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேஷ். ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மணிமேகலை.

    இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ராஜேஷ் தினந்தோறும் மது குடித்து வந்து மனைவி மணிமேகலையை தாக்கி வரதட்சணை பணம் கேட்டு வந்தார்.

    இதுகுறித்து கடந்த 19-ந்தேதி வடபழனி மகளிர் போலீஸ் நிலையத்தில் மணிமேகலை புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி வழக்குபதிவு செய்து ராஜேசை கைது செய்தார்.

    Next Story
    ×